கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம் ‛அட்ரஸ்'. “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜாமோகன் “அட்ரஸ்” படத்தை இயக்கி வருகிறார். இந்த நாட்டில் 'அட்ரஸ்' இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது 'அட்ரஸை' தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக த்ரில்லாக இயக்கிவரும் இதன் படபிடிப்பு, சமீபத்தில் நடந்தது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.
ராஜாமோகன், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஒரு புரட்சிகரமான 'காளி' என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வா முரளி நட்புக்காக நடித்திருக்கிறார். உண்மை சம்பவமான இக்கதையில் இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். இவர் 'மெரினா', 'மூக்குத்திஅம்மன்' , 'நெற்றிக்கண்' படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனுடைய படப்பிடிப்பு, மலையும் மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. விரைவில் டீசர், ஆடியோ வெளியாகும்.